பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்த நடிகர் கார்த்தி.! முண்டியடித்து சென்ற ரசிகர்களால் திரையரங்கு கண்ணாடி உடைப்பு.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்த நடிகர் கார்த்தி.! முண்டியடித்து சென்ற ரசிகர்களால் திரையரங்கு கண்ணாடி உடைப்பு.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. இந்தப் படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 

அதன் படி முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர். அதாவது ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்துள்ளனர். 

இவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அந்தவகையில், காசி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த நடிகர் கார்த்தி, படம் முடிந்து வெளிவரும் போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ரசிகர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உடைந்த திரையரங்கின் கண்ணாடி கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக சரி செய்து தரப்படும் என்று காசி திரையரங்க நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthi saw ponniyin selvan 2 movie in kasi theater in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->