பெண்கள் ஃபுட்பால் கிடையாது.. சௌமியாவை ஏன் கைது செய்தீங்க? - குஷ்பூ ஆவேசம்.!
actor kushboo press meet about anna university student harassment case
பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் தூக்கி வீசுவதற்கு என்று பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியான தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிது படுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கிறது என்றால் எந்த கட்சியினரும் பேசலாம். நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். ஆனால் நாங்கள் பாஜக சார்பாக பேச கிடையாது.
எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். பெண்ணின் பாலியல் வன்கொடுமையை தயவுசெய்து அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கலையா என்று கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் தூக்கி வீசுவதற்கு.
இந்த மாணவிக்கு நடந்த பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும் என்பது எங்களது நோக்கம். மீண்டும் இதுபோன்ற பிரச்சனை தொடரக்கூடாது. 25 லட்சம் கொடுத்துவிட்டோம், கல்வி கட்டணத்தை கொடுத்துவிட்டோம் என்று சொல்வதால் பெண்ணுக்கு ஏற்பட்ட அநியாயம் சரியாகிவிடுமா ?
பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். என்னமாதிரி வேறு பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். அந்த பெண் பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது? அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்.
எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி நாளை பேரணி நடத்துகிறது. நான் மகளிர் ஆணையத்தில் இருந்திருக்கிறேன். ரொம்ப மோஷமாக புகார்கள் வரும்.
மற்ற மாநிலங்களை கம்பேர் பண்ணாதீங்க. என் வீட்டில் பிரச்சினை நடக்கும்போது மற்ற வீட்டில் நடக்குதா இல்லையா என்று பேசக்கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக்கூடாது. சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள்.
கனிமொழி எங்கே? எல்லாத்துக்கும் முன் வந்து பேசுவாங்களே! திமுக மகளிர் அணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்த பெண் குரல் கொடுத்தார்கள். அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்கள்?
மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேவாவது பேசுனாங்களா? அரசு சொல்வதைதான் அவர்கள் செய்வார்கள். யார் அந்த சார்? அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor kushboo press meet about anna university student harassment case