இரவோடு இரவாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான் - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். 

அங்கு அவர், அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு தொகுதி ஒதுக்கும்பட்சத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது.

அதன் முடிவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் இத்தேர்தலில் பரப்புரை நடைபெறும். இந்தத் தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுவதாக செயற்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் மதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor mansoor alikhaan dismiss indian Democratic Tigers party leader post


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->