எல்லாருக்கும் வேட்டு வைக்க போறேன் - நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்.!
actor mansoor alikhan election camphaign in vellore
வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் படி வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்ற மன்சூர் அலிகான், அங்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன், விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த மீன்களை வெட்டி, விலையைக் கூறி விற்பனை செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது-
”பிற கட்சிகளில் உள்ளதை போல் எனக்காக யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் இஸ்லாமிய வாக்குகளை பிரிக்க பாஜக, அதிமுகவுக்கு B – டீமாக செயல்படுவதாக சிலர் பொய்யான பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். அவ்வாறு நான் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை B டீம் முதல் Z டீம் வரை கூட கூறட்டும். எனக்கு கவலை இல்லை.
பொருத்திருந்து பாருங்கள் நான் எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அதை ஏன் வாக்குறுதியாக கொடுக்கிறீர்கள். இப்போதே திமுக கூட்டணியில் 38 எம்பிக்கள் இருக்கின்றார்களே, இந்த கோரிக்கையை இப்போதே செய்ய வேண்டியது தானே” என்று கட்டமாக பேசியுள்ளார்.
English Summary
actor mansoor alikhan election camphaign in vellore