எதுக்கு ஒரே நாடு, ஒரே வெங்காயம் - மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


எதுக்கு ஒரே நாடு, ஒரே வெங்காயம் - மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரபலங்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:- 

‘’நதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அதை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனம், மடத்தனம், முட்டாள்தனம். இதனை எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள எல்லா அணைகளிலும் தண்ணீர் கடல் மாதிரி மிதக்கிறது. ஆனால், ஒரு சொட்டுக் கூட தரமாட்டேன் என்று கூறுகிறார்கள். அப்புறம் ஏன் ஒரே நாடு, ஒரே வெங்காயம் என்றெல்லாம் பேசுறீங்க’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor mansur alikhan press meet in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->