பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கு - நடிகர் மோகன் பாபு ஜாமீன் மறுப்பு.!
actor mohan babu bail denied in telungana high court
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சமீப நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக, இரு தரப்பினரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த புதன் கிழமையன்று மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பினர்.
அந்த நேரத்தில் மோகன்பாபு பத்திரிகையாளர்களை மைக்கை வைத்து தாக்கினார். இதில் காயமடைந்த இரண்டு பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான தெலுங்கானா பத்திரிகையாளர் சங்கம் போலீசில் புகார் அளித்தது. அதன் படி போலீசார், நடிகர் மோகன் பாபு மீது வழக்குபதிவு செய்தனர்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி வரும் மோகன்பாபு, வழக்கு விசாரணைக்கு வரும் வரை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்ததில் மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்கிவிட்டால் அவர் துபாய் சென்றுவிடுவார் என்று காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க தெலுங்கானா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
English Summary
actor mohan babu bail denied in telungana high court