தமிழக அரசுக்கு குட்டுவைத்த நடிகர் பார்த்திபன்! மக்கள் வரிப்பணம்? சொத்துக்களை பறிமுதல் பண்ணுங்க!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்,திரைப்  பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தமிழக அரசு நிர்வாகத்தை கண்டித்து பதிவிட்டு இருந்தார். மேலும் நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்ற நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதியும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 நிவாரண நிதியும் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தவறான முன் உதாரணமாகும் என்றும், மேலும் அவர்கள் கள்ளச்சாராயம் குடிக்க தூண்டும் விதமாக அமைந்து விடும் என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் கள்ளச் சா…. வுக்கு எதுக்கு நல்லச் சாவு ( ரூபாய் 10 லட்சம் ) என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நிவாரண நிதி கொடுக்கும் இந்த விவகாரத்தை பொருத்தவரை கள்ளச்சாரத்தை தடுக்க தவறியதால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு தமிழக அரசு தான் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம்,  இந்த நிவாரண நிதியை கள்ளச்சாராயம் உள்ளிட்ட எந்தச் சாராயமும் குடிக்காத தமிழக மக்கள் கட்டும் வரியில் இருந்து கொடுக்கக் கூடாது என்றும், கலாச்சாராயத்தை தடுக்க தவறிய அந்த பகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், உயர்மட்ட அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பிக்களின் சம்பளப் பணம் அல்லது அவர்களின் சொத்துக்களை முடக்கி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Parthiban Condemn to TNgovt Kallakurichi Kallasarayam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->