சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்.!

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினத்தை ’ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். 

அதன்படி நாட்டில் உள்ள பொதுமக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பலரும் தேசியக் கொடியை தங்களது இல்லத்தில் ஏற்றி வைத்தும், சமூக வலைத்தளங்களில் உள்ள தங்களின் கணக்குகளில் முகப்பு படங்களிலும் தேசிய கோடியை வைத்து கொண்டாடத் துவங்கியுள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற போது அங்கு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகள் உடன் இணைந்து தேசிய கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், ஆதி பத்ரிநாத் கோவிலில் 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவையும் ரஜினிகாந்த் வழிபட்டதாக தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajikanth celebrate independence day function photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->