விஜய் களத்தில் இறங்கி விளையாடட்டும் - நடிகர் ஆர்.கே.சுரேஷ்.! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது;-

"நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாட்டிற்கு தேவை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்போதுதான் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அவர் களத்தில் இறங்கி விளையாடட்டும்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பெரிய கட்சிகள் தான். அனுபவம் வாய்ந்த கட்சிகள் தான். 2026 தேர்தல் என்பது கூட்டணியின் உண்மையான பலத்தை புரியவைக்கும் தேர்தலாக இருக்கும். இதுவரை பார்த்த தேர்தல்களை விட 2026 தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருக்கும்." என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rk suresh speech about actor vijay political


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->