சைவமும், வைணவமும் இந்து மதம் இல்லையா..? நடிகர் சரத்குமார் ஆவேச பேச்சு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திருமாவளவன் பிறந்தநாள் மேடையில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் வரலாறு மாற்றப்படுகிறது" என பேசி இருந்தார்.

இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இந்து இல்லை என்று கூற முடியும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் நேற்று டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,

"சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா.? சைவமா.? வைணவமா.? என்ற சர்ச்சை நாட்டிற்கு தேவைதானா?" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாக திரையரங்கில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின்னர் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் ராஜராஜ சோழன் இந்துவா? என்ற சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் நான் ஏற்கனவே அறிக்கையின் மூலம் பதில் அளித்து விட்டேன். அதை நீங்கள் தெளிவாக படித்தால் அதில் உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும். உலக நாடுகள் அனைத்தும் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற கேள்வி இங்கு தேவைதானா என பதிலளித்துள்ளார்.

மேலும், பொன்னியின் செல்வன் படத்தை வெற்றி பெற படமாக்கிய ரசிகர்களுக்கு அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sarathkumar speech about ponniyin Selvan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->