500 கொடுத்தா உன்னை கழுத்தறுத்து போட சின்னப்பசங்க இருக்காங்க.. நடிகை ராதா காவல் அதிகாரி கணவரின் மீது புகார்.! - Seithipunal
Seithipunal


காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவான தனது கணவர், தன்னை மீண்டும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என நடிகை ராதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ராதா. தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகை ராதா, காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கணவரின் மீது புகார் அளித்தார். இந்த புகாரில், தன் மீது சந்தேகப்பட்டு கணவர் சித்திரவதை செய்து வருவதாகவும், காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தால் அவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அது தொடர்பாக விசாரணை நடக்கவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இருவரிடமும் சமாதானம் பேசி எழுதி வாங்கி அனுப்பி இருக்கின்றனர். மேலும், வேலை பறிபோகும் என்ற பயத்தில் மனைவியிடம் கெஞ்சி அமைதியாக செல்ல ஆலோசனை கூறியுள்ளார். 

கணவர் திருந்திவிட்டார் என்ற நம்பிக்கையில் நடிகை ராதாவும் சமாதானமாக சென்ற நிலயில், கடந்த வெள்ளிக்கிழமை பரங்கிமலை இணை ஆணையர் மற்றும் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவின் மீது புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், வசந்த ராஜா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணையில் இருக்கும் நிலையில், விசாரணைக்கு வரும்போது தனக்கு சாதகமாக பேச வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூபாய் 500 கொடுத்தால் கண்ணகி நகர் இளம் சிறார்களை வைத்து கழுத்தை அறுத்து உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். 

மேலும், நான் எனது குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு, ஜெயிலுக்கு சென்று வெளியே வந்து விடுவேன். நான் சொல்வதை கேட்காவிடில் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Radha Complaint his Police Husband Vasantha Raja about Murder Threatening 4 July 2021


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->