அதானி குழும துறைமுக விரிவாக்கம்!! மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் திடீர் ரத்து.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுபள்ளியில் உள்ள அதானி குழுமத்திற்கு சொந்தமாக சுமார் 330 ஏக்கரில் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அதானி குழுமம் நீண்ட வருடங்களாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. தற்போது 330 ஏக்கரில் இருக்கும் இந்த துறைமுகத்தை 6,111 ஏக்கருக்கு விரிவு படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வரும் செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற இருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  மேலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக ஆட்சியில் துறைமுகம் விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும், புலிகாட் ஏரியை மாசுபடுத்தும் எனவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani Port sxpansion people opinion meeting postponed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->