''வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்''; துணை முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில், பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வாக்கு வாதத்தின் போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியுள்ளார்.

தமிழக வீராங்கனை தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக அவர் பேசியதாவது; 

தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். தமிழக கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பஞ்சாப் அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், விளையாட்டு புள்ளிகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இன்று இரவே தமிழக வீராங்கனைகள் பஞ்சாப்பில் இருந்து டெல்லி அழைத்து வரப்படுவார்கள். வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Additional security to be provided to Tamil Nadu athletes going abroad Deputy Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->