என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தமிழக செய்தி ஊடங்களை கடுமையாக விமர்சித்த அதிமுக!
ADMK Condemn to TN News Media for kallakurichi kallasarayam issue
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், தமிழக செய்தி ஊடகங்கள் ஆளும் திமுக அரசுக்கு கேட்ட பெயர் வரக்கூடாது என்று ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ X பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கள்ளச்சாராயத்தால் 10 பேர் இறந்திருக்கிறார்கள். 60கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தாய்மார்களும், மனைவிகளும் கதறி அழும் காட்சி தமிழ்நாட்டையே உலுக்கி வரும் நிலையில், தமிழ் ஊடகத்தாரின் அரசியல் பாய்ச்சிய கல்நெஞ்சை மட்டும் கரைக்கவில்லையோ?
இன்றைய தலைப்புகளும் வழக்கம் போல அஇஅதிமுகவும் தேர்தல் அரசியலும் தான்!
எப்போது தான் உங்கள் முதலாளிகளான ஆட்சியாளர்களின் Narrative-களை மட்டுமே பேசுவதை விடுத்து, மக்களின் பிரச்சனையைப் பேசப்போகிறீர்கள்?
மனசாட்சிப்படி, நாளையாவது உங்கள் விவாதங்கள் கள்ளச்சாராய மரணங்கள் பற்றி இருக்குமா" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள X பதிவில், "தவறுதலாக போர்வெல் குழியில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியை தொடர்ந்து 3 நாட்களாக காட்டி தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் செய்த ஊடகங்கள், இப்போது விடியா மாடல்- அரசுக்கு கெட்டபெயர் என்றவுடன் வாயைமூடி மவுனம் காக்கின்றது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
ADMK Condemn to TN News Media for kallakurichi kallasarayam issue