தன் சட்டையை தானே கிழிப்பது போல் - வெட்கக்கேடானது - எடப்பாடி பழனிச்சாமி பதிலடி! - Seithipunal
Seithipunal


திருவெண்ணைநல்லூரில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போல் ஓர் அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்தார்.

மேலும், உயிரிழந்த ஜெயராமனுக்கு அளவுக்கு அதிகமாக மது பழக்கம் இருப்பதால் புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தை கள்ளச்சாராயம் மரணம் என தெரிவித்து இறப்பிலும் அரசியல் ஆதாயத்தை எடப்பாடி பழனிச்சாமி தேடுகிறார். தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வரப்படுவதுதான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திரா-விலிருந்து எரிசாராயமோ, சாராயமோ, கள்ளச்சாராயமோ தமிழகத்திற்கு கடத்திக் கொண்டு வரப்படுகிறது என்றால், அதை தடுக்காமல் இந்த விடியா திமுக ஆட்சியின் காவல்துறையினர் சோதனைச்சாவடிகளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் கைகளை கட்டிப்போட்டது யார்? ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுவதில் நியாயமிருப்பதாக தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் மரணம் அடைந்தது குறித்த எனது கருத்துக்கு முக்கி முனகி மூன்று பக்கம் பதிலளித்துள்ள சட்ட மந்திரி, புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்று வாக்குமூலம் அளித்திருப்பது, 'தன் சட்டையை தானே கிழிப்பது போல்', காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையை குறை கூறியிருப்பது நகைச்சுவையானது" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisami Condemn to DMK Govt and minister rahupathy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->