பெண் செய்தியாளருக்கு மிரட்டல்! தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல.. அதிமுக தரப்பில் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆதி திராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் விடுதிகளின் அவல நிலைகளை விடுதிக்கே  நேரடியாக சென்று செய்தி வெளியிட்ட பெண் செய்தியாளர் லதாவை ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சமத்துவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், SC-ST சட்டத்தின் கீழ் உன்‌ மேல் நடவடிக்கை எடுப்பேன் என மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வெற்றிச்செல்வன் மிரட்டல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மாணவர்களின் 'Privacy' பற்றி பேசும் அதிகாரி. அந்த விடுதியின் கழிவறையை இதற்கு முன்னால் ஆய்வு செய்திருந்தால் 'Privacy' பற்றி பேசியிருக்க மாட்டார்.

கதவில்லாத நிலையில் கழிவறையை தினம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு என்ன ப்ரைவசியை இந்த அரசு இதுவரை தந்தது? தலித் மாணவர்களின் வேதனையை வெளியிட்டதற்கு இவ்வளவு கடுமையான மிரட்டலா?

தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்துக்களை கையெழுத்துக்கள் மூலம் நிர்ணயிக்கும் நிர்வாக நிலையமாம்,தலைமை செயலகத்தில் பெண் செய்தியாளரை மிரட்டி-அவமானபடுத்தி அனுப்புவது எவ்வளவு பெரிய இழிசெயல்?

இன்னும் என்னவெல்லாம் நடந்தால் இந்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்?
தலித் மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறது.
இதெல்லாம் தெரிந்தும் திமுக கூட்டணி கட்சியினர் வாய் திறக்க மறுக்கின்றனர்.

சனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையினரை மிரட்டும் இந்த அதிகாரிகள் மீது திமுக அரசு‌ நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல..
இதற்கான வினையை பாசிச திமுக அரசு‌ விரைவில் உணரும்!

[10:03 AM, 9/13/2024] Mv:

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கண்டன செய்தியில், ஆதி திராவிடர் மாணவர் விடுதியின் உண்மை நிலையை மக்களுக்கு வெளியே கொண்டுவந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பெயரால் விடியா திமுக அரசு மிரட்டுவது பாசிசத்தின் உச்சம். 

விடியா திமுக ஆட்சியில், மாண்பு பொருந்திய தலைமைச் செயலகத்தில், ஒரு பெண் செய்தியாளர் நடத்தப்படும் முறை இது தானா? பெண் செய்தியாளரை மிரட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அதிகார மமதையோடு ஊடகங்களை ஒடுக்க நினைக்கும் முயற்சிகளை கைவிடுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். 

மேலும், ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் லதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடர்வேன் என  தலைமைச் செயலகத்தில் வைத்தே அதிகாரி மிரட்டி இருப்பது குறித்து முதலமைச்சர் பதில் சொல்லியே தீர வேண்டும்.

"ஊடகச் சுதந்திரம்", "கருத்துச் சுதந்திரம்" என்றெல்லாம் வாயளவில் மட்டுமே பேசும் விடியா திமுக முதல்வர், ஊடகங்களின் செயல்பாட்டை முடக்க முயல்வதுற்கும், மிரட்டுவதுற்கும் எனது  கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Jayakumar Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->