தமிழகம் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சி தான் இந்த பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7 சதவீதம் வரை நிலையான விலை விகிதப்படி (Constant prices) பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தைவிட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்த தருணத்தில் GST வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம் பற்றி குடியரசுத் தலைவர் அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பிகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும்.

பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வட மாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை.

தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது" என்று எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say about Union Budget 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->