அண்ணாமலை வேதாளம்! இப்போ செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது! - ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


சென்னை : அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது,  நான் கைலி கட்டிக் கொண்டு பேட்டி அளிப்பதாக அண்ணாமலை கூறி உள்ளார். கைலி கட்டுபவர்களை அவமதிப்பது போல அவர் பேசியுள்ளார். முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் கைலிதான் கட்டுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பலர் கைலியுடன் தான் இருப்பார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாதிரி கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் யாரும் நைட்டி போட்டுக்கொண்டு சுற்றுவது இல்லை. அதிமுக எழுச்சியோடு வழி நடத்தப்படுகிறது. இதனை பிடிக்காதவர்கள் தான் திட்டமிட்டு திரைக்கதை எழுதி மாயையை உருவாக்குகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத துரோக செயலை செய்து இருக்கிறார். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? துரோகம் செய்து அதிமுகவின் ரத்தத்தை குடித்தவர்கள் அவர்கள் என்று தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரியும். தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளதா? என்பதை சந்தேகமாக உள்ளது. முதலமைச்சர் இருக்கிறாரா? உள்துறை இருக்கிறதா? என்பதை சந்தேகமாக உள்ளது என தெரிவித்தார்.

செய்தியாளர்கள் எழுப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு விடு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறி உள்ளது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister Jayakumar pressmeet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->