உண்மையான களம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் - முன்னாள் அமைச்சர் பதிலடி.!
admk ex minister jeyakumar speech about tvk leader vijay
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் உறுதிமொழியுடன் தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.
இந்த நிலையில், விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது:- "உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான். தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் பேசியுள்ளார். ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்" என்றார்.
English Summary
admk ex minister jeyakumar speech about tvk leader vijay