#BREAKING | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையர் விசாரணை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பக்திகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

விசாரணைக்காக என்னை ஆணையம் அழித்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல, எனவே எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயபாஸ்கர் எம்எல்ஏ வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அவரின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இது குறித்த தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சில மாதங்களுக்கு முன் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister name Arumugasamy Committee 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->