திருநெல்வேலி || விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகர் - சோகத்தில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி || விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகர் - சோகத்தில் தொண்டர்கள்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் எஸ்.அசோக்குமார். இவர் கடந்த மாதம் 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அரசனார்குளம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அசோக் குமார் மட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் அதிமுகவினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk excuetive died accident in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->