வெளியான வீடியோ! இதுக்கு என்ன அர்த்தம்? பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக! - Seithipunal
Seithipunal


தமிழர்களை இழிவுப்படுத்தி பாஜக வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "உலகிற்கு நல்வழியையும், பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுத்த முதல் இனம் தமிழினம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலிலும், இலக்கியத்திலும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என பாரதிய ஜனதா கட்சிக்கு தெரிய வாய்ப்பில்லை.

எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாரதிய ஜனதா கட்சி எதற்காக விகே பாண்டியனை கண்டு அஞ்சுகிறது.

தனி மனிதனை அவமானப்படுத்துவதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. ஒரு மனிதரை இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் பிரித்து, பிரிவினை வாதம் என்ற விதியின் வழியாகத்தான் பாரதிய ஜனதா கட்சி பார்க்கிறது. 

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழினத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளதாக ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condeamn to BJP for VK Pandiyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->