சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் பகீர் செயல் - புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைசி இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்குகிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்த கஞ்சாவினை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக காவல்துறையும் மேற்கொண்டு வந்தன.

குறிப்பாக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கஞ்சாவை ஒழிப்புக் கென்று தனி கவனத்தை செலுத்தி வந்தார்.

இருப்பினும் கஞ்சா புழக்கமும், கஞ்சா போதையினால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் குறைந்த பாடு இல்லாமல் இருந்தது.

மேலும் இது குறித்த ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கஞ்சாவை கட்டுப்படுத்த கோரி தமிழக காவல்துறைக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தது.

அதிலும் காவல்துறைக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்ற ஒரு வார்த்தையையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பயன்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவில் சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சாவை பயன்படுத்தும் புகைப்படங்கள் இரண்டையும் வெளியிட்டு அவர் தெரிவித்திருப்பதாவது,

பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்ற ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk jayakumar condemn TN government Chennai metro rail ganja


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->