இரவோடு இரவா முடிச்சுட்டாங்களே.. வீடியோ வெளியிட்டு குமுறும் ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


சென்னையில் அதிமுக சார்பில் மக்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட விலையில்லா தேநீர் கடையை, ஆளும் திமுக ஆட்சியாளர்கள் அகற்றியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தல்! மழைக்காலத்தில் தேநீர் பந்தல்! என அதிமுக சார்பில் மக்கள் பயன் பெறுவதற்காக, சென்னை இராயபுரம் 48-வது வட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்குமுன் ஜெயகுமாரால் தேநீர் பந்தல் திறக்கப்பட்டது.

மாலைநேரங்களில் தேநீர்,பால்,சுக்கு காபி,பலகாரம் என பல பொருட்கள் மக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் இந்த தேநீர் பந்தலை அகற்றியுள்ளனர். இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"இராயபுரத்தில் மழைக்கால தேநீர் பந்தலை இரவோடு இரவாக அகற்றிய அராஜக அரசு!

மழைகாலத்தில் எளிய‌ மக்கள் பயன்பெறும் வகையில் இஞ்சி டீ,சுக்கு காபி‌,பலகாரங்கள் என‌ மக்களுக்கு தினந்தோறும் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.

தேநீர் பந்தலால் மக்கள் பயனடைவதை கண்டு பயம் கண்ட திமுக அரசு,
இரவோடு இரவாக தேநீர் பந்தலை அகற்றியுள்ளது.


இது ஒன்றை அகற்றி விட்டதால் அவ்வளவு தான் என்று எண்ணி விட வேண்டாம்.
இனி இராயபுரத்தில் அடுத்தடுத்து தேநீர் பந்தல்கள் திறக்கப்படும் என திமுக அரசிற்கு தெரிவித்து‌க் கொள்கிறேன்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Govt for Thenir Panthal rayapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->