சென்னை மக்களுக்கு ஆப்பு வைத்த சென்னை மாநகராட்சி! சொத்தை பறிப்பதற்காக வரி? பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி சாா்பில் வீடுகள், கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயா்த்துவதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது ரூ.1,000 வரி செலுத்துபவா்கள் கூடுதலாக ரூ.60 செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆண்டுதோறும் சொத்து வரி‌ உயர்த்தப்பட உள்ளதால், சென்னையில் வாடகை கட்டணம் உயரும் என்றும், மக்களின் சொத்துக்களை பறிப்பதற்காக இந்த வரி உயர்வா என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு. வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம்‌ இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த சொத்து வரி‌ உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும். இதனால் மாணவர்கள்,இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும்.

சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா? என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to TNGovt Chennai Property Tax


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->