நடிகர் விஜய்க்கு திமுக தரப்பில் கடும் நெருக்கடி! பயத்தில் செய்வதறியாது திமுக செய்து வருகிறது! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் கொடி ஏற்றுவது கூட திமுகவிற்கு பயம். விஜய்க்கு எவ்வளவு தடங்கல் கொடுக்க முடியுமோ அவ்வளவு தடங்கல்களை திமுக கொடுத்து வருவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "நடிகர் விஜய் கொடி ஏற்றுவது பாதிப்பு ஏற்படும் என்பதால் அவருக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது.

ஜனநாயக நாட்டில் கொடி ஏற்றுவதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. விஜய் கொடி ஏற்றுவது திமுகவிற்கு பயத்தை உண்டாகியுள்ளது. விஜய்க்கு அதிபட்ச தடங்கல்களை திமுக கொடுத்து வருகிறது. இது சரியான போக்கு அல்ல" என்று யகுமார் தெரிவித்தார். 

இதற்கிடையே, விஜய்யின் தவெக கொடியில் வாகை மலர் இடம்பெற போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லோகோ ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக அறிக்கைகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதை மையமாக வைத்து லோகோ தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது லோகோ இடம்பெற உள்ளதாக வெளியான தகவலால் தவெக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு

தவெக கொடியில் இடம்பெற போவது வெற்றியை குறிக்கும் வாகை மலரா? அல்லது சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோவா? நாளை காலை தான் தெரியவரும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK jayakumar say about TVK Vijay DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->