#ResignStalin: முதலவர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்! - Seithipunal
Seithipunal


நிர்வாக திறனற்று, ஆட்சி செய்ய தகுதியற்று நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தொடர் கதையாகி உள்ள கள்ளச்சாராய மரணங்கள்! உறங்கி கொண்டிருக்கும் முதலமைச்சரின் காதுகளுக்கு கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்த குடும்பங்களின் ஓலங்கள் கேட்கவில்லையா?

முதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஊடகத்தினரிடம் கள்ளச்சாராயம் குடித்தனர் என்று பேட்டி கொடுத்தனர்.

இதற்கு நேர்மாறாக கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் கொடுத்து மூடி மறைக்க பார்த்தது ஏன்?

யாரை காப்பாற்றுவதற்கு இந்த விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் கொடுத்தார்?

இதில் மிகப்பெரிய அளவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது!

ஆங்காங்கே கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்படும் போதே அதன் அபாயத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக உள்துறையை‌‌ கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினரை அழைத்து நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தால் இத்தனை உயிர்கள்‌ பறிபோவதை தடுத்திருக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ஸ்டாலின்?
வழக்கம் போல நிவாரணம் தந்துவிட்டால் இழந்த உயிர்கள் மீண்டெழுந்திடுமா?

மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றமும் மாவட்ட கண்காணிப்பாளரை பணியிடை நீக்கமும் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இவர்களுக்கெல்லாம் நிர்வாகத்தில் தலைமை வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதலில் பதவி விலகியிருக்க வேண்டும்.

கடந்த வருடம் விழுப்புரம்! இந்த வருடம் கள்ளக்குறிச்சி! நாளை?

நிர்வாக திறனற்றும் ஆட்சி செய்ய தகுதியற்றும் நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Say Stalin Should Resign Kallakurichi Kallasarayam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->