வசமாக சிக்கிய அதிமுக எம்எல்ஏ & பாஜக பெரும்புள்ளி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal



அரசு நில அபகரிப்பு புகாரில் அதிமுக எம்எல்ஏ ஜெயராம் மற்றும் பாஜக நிர்வாகி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டது. இது சம்பந்தமான வழக்கு இன்று விசாரணை வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அந்த நிலம் மீட்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை நேரில் ஆய்வு செய்தபோது, சிங்காநல்லூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஜெயராம் என்பவரும், பாஜகவின் மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய பாலாஜி உத்தம ராமசாமி என்பவரும் கட்டுமானங்களை ஏற்படுத்தி, அதை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டுமானங்கள் கட்டியவர்கள்,  அந்த நிலத்தை மற்றவர்களின் பெயர்களில் மாற்றி உள்ளார்கள்.

இதற்கு அரசியல் அழுத்தம் காரணமா? அல்லது அதிகாரிகளின் நிர்பந்தமா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இந்த வழக்கை முழுமையாக விசாரணை செய்து, நான்கு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி, அரசு நிலத்தை அபகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட முடியாது என்றும் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தனது  கருத்தாக பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Jayaram BJP Dist head Balaji Land case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->