சட்டசபையில் இருந்து வெளியேறிய அதிமுக எம்.எல்.ஏக்கள் - காரணம் என்ன?
admk mlas walk out from assembly
தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது.
அதன் பின்னர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது, அவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ரூ.1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாகவும்,அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாகவும் பேச முயற்சி செய்தனர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு பேச வாய்ப்பு தரப்படாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், சட்டசபையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
English Summary
admk mlas walk out from assembly