அதிமுக முன்னாள் அமைச்சர் சகோதரருக்கு முன்ஜாமின் மறுப்பு - 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சகோதரருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

வழக்கின் பின்னணி:

குச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரில் விஜயபாஸ்கர், சேகர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்தது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது.

இந்த வழக்கு திமுகவால் அரசியல் பழி வாங்கும் நோக்கில் தொடரப்பட்ட பொய்யான வழக்கு என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MR Vijaya Bhaskar brother bail case channai HC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->