வலைத்தளங்களில் வைரலாகும் அதிமுக போஸ்டர் - கொந்தளிப்பில் பாஜக தொண்டர்கள்.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வலைத்தளங்களில் வைரலாகும் அதிமுக போஸ்டர் - கொந்தளிப்பில் பாஜக தொண்டர்கள்.!! நடந்தது என்ன?

வருகிற 20-ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் எழுச்சி உரையாற்ற உள்ள எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவைகளை அதிமுகவினர் ஒட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மதுரை, சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார். 

அந்த போஸ்டரில், நாடாளுமன்ற பின்னணியில் ‘வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த செயல் பாஜக தரப்பில் அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மணிமாறன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "மதுரையில் 20ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வரை வருவார்கள். 

இந்த மாநாடு உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற உள்ளது. எடப்பாடிக்கு முதலமைச்சர் அல்ல. பிரதமர், ஜனாதிபதியாகும் அளவிற்கு தகுதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
அப்போது செய்தியாளர்கள் தரப்பிலிருந்து, "பாஜக உடன் கூட்டணி என்றாலும் எடப்பாடிதான் பிரதமரா" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மணிமாறன் "ஆமாம். எங்களுக்கு ஆசை உள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார். 

பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வருங்கால பிரதமர் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களிலும்  வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk poster viral in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->