என்னங்க நடக்குது இங்க, இந்த திமுக அரசு வேடிக்கை தான் பார்க்குதே தவிர ஒன்னும் செய்யலையே - கொந்தளிக்கும் எஸ்.பி.வேலுமணி! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாவது, "கோவை மாவட்டத்தில் குடிநீா் ஆதாரமாக அமைந்துள்ள சிறுவாணி அணையில் 49.50 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது சிறுவாணி அணையில் 5 அடி குறைவாக தண்ணீர் சேமிப்பதால் 19 சதவீதம் குடிநீா் கிடைக்காமல் போகிறது. 

சிறுவாணி அணையில் தண்ணீர் நிரம்ப முன்னரே தண்ணீரை ஆற்றில் திறந்து விடும் கேரள அரசை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். அணை பாதுகாப்பாகதான் இருக்கிறது. ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.

சிறுவாணி அணையில்  முழுமையாக 50 அடி தண்ணீர் நிரம்பினால் ஒராண்டிற்கு குடிநீா்ப் பிரச்னை இருக்காது. எனவே, அணையின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். திமுக ஆட்சிக்குப் பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை.  

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும், இதனால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் கடலில் கலப்பதாகவும், செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனைப் போன்று, பாலம் கட்டுவதாக கூறி வரும் கிருஷ்ணாபதி குளத்துக்கு வரும் தண்ணீரை தடுத்து வைத்துள்ளனர். பாலம் எப்பொழு‌து வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும்போதுதான் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். 

இது குறித்து தமிழக அரசு, கேரள அரசுடன் விவாதித்து இதற்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். சிறுவாணி அணையை தூா்வாரி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK SP Velumani Condemn to DMK Govt for Siruvani River issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->