அப்படி போடு! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்! - Seithipunal
Seithipunal


மின் பகிர்மான கழகம் உயிரோடு செயல்படுவதற்கு உதய் மின் திட்டம் தான் காரணம் என்றும், உதய் மின் திட்டத்தை தமிழக அரசு ஏற்றதால் தான், மின் பகிர்மான கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

உதய் மின் திட்டத்தால், மின் பகிர்மான கழகங்களுக்கு 22 ஆயிரத்து 815 கோடி ரூபாய் கடன் குறைந்து, தற்போது ரூ.2282 கோடி கட்ட வேண்டிய வட்டி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கமணி தெரிவித்துள்ளார்.

உதய் மின் திட்டத்தால் மின் கட்டண உயர்வு என அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய பல்லவியை பாடி கொண்டு இருக்கிறார். உதய் மின் திட்டம் மின்வாரியத்தின் நஷ்டத்தை பற்றி அமைச்சர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.

மேலும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, தி.மு.க. அரசு மின்கட்டணத்தை மூன்றாம் முறையாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க.வின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, விலைவாசி உயர்வுக்கு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு என்று பல்வேறு வகைகளில் தமிழக மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்கட்டண உயர்வைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் என்று பழைய பல்லவியை பாடியுள்ளார்.

நான் தி.மு.க. அரசுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதுதான். உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?

மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டு விட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் தங்கமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Thangamani condemn to Thangam Thennarasu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->