"அனுபவமும், தூய மனமும்".. அஜித்குமாரை புகழ்ந்து தள்ளிய மாஜி அமைச்சர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்ததை அடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜித்குமார் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருடன் பேசியுள்ளனர்.

நடிகர் அஜித்குமாருக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்பதால் அவருடன் அரசியல் குறித்து பேசி இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. எனினும் நடிகர் அஜித்குமார் உடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நட்புறவு உடன் இருக்க விரும்புவதாகவே இந்த நிகழ்வு உணர்த்துகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் உடனான சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் "தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜு அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது.

அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!" என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்ததோடு அந்தப் பதிவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்தே நடிகர் அஜித்குமார் உடன் அதிமுகவினர் நட்புடன் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Vijayabaskar praised actor Ajith Kumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->