இந்தவாரம் கரப்பான்பூச்சி! ஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட வாலிபர் மருத்துவனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


ஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக ஓட்டல்களில் சாப்பிடும் உணவுகளில், பல்லி,எலி,பூரான் போன்ற பூச்சுகள் இருப்பது தொடர்ந்து நடந்தது கொண்டே வருகிறது. சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் போட்ட ஐஸ்க்ரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் சாப்பிட வாங்கிய பிரியாணியில் இருந்த எலும்பு துண்டில் புழுக்கள் கிடந்த சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சென்னை ராயபுரம் ஆஞ்சநேயர் நகர் 10வது தெருவை சேர்ந்தவர் திவாகர். இவர் பிராட்வேயில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள ஓட்டலில் உணவு பார்சலை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டு உள்ளார்.

அப்போது உணவில் கரப்பான்பூச்சி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த உணவில் பாதியே சாப்பிட்டு திவாகருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது 

இதனால் அவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தவுடன் மேலும் இதை பற்றி விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adolescent admitted to hospital after eating cockroach meal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->