ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று எதிரொலி : கேரளாவில் 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது,

வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் பன்றிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இறந்துக்கிடந்ததை அடுத்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2வது பண்ணையில் இருந்த 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

African Swine Fever Epidemic Reverberation 300 Pigs in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->