தொடர் இறப்பு! கேரளாவில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல். ஒரே நாளில் 310 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கட்டிலப்பூவம் மடக்கதாரா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர்கள. சுகாதாரத்துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்து பன்றிகள் இறந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து நோய் பரவலை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றி உள்ள பகுதிகளில் தொற்று மண்டலமாகவும் 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விற்பனை, பன்றி இறைச்சி கடைகளை  திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

African swine fever spreading rapidly in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->