42 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பெண்.! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரம் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கடந்த 1982ஆம் ஆண்டு நிஷா என்ற மூன்று வயது குழந்தையை டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஸ் என்பவர் தத்தெடுத்து டென்மார்க்கில் வளர்த்து வந்தார். தற்பொழுது 44 வயதான நிஷாவிற்கு டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்த பேட்ரிக்(45) என்பவருடன் திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நிஷா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண ஆசைப்பட்டு இதுகுறித்து கணவரிடம் கூறியுள்ளார். இதனால் நிஷாவும், அவரது கணவர் பேட்டரிக்கும் டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர். மேலும் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவாpர் என்பவரின் உதவியுடன் பெற்றோரை விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிஷா வந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நிஷா கூறும்பொழுது, என்னை 1980 ஆம் ஆண்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து 1982ஆம் ஆண்டு என்னை தத்தெடுத்து டென்மார்க் அழைத்துச் சென்று அங்கேயே படிக்க வைத்து வளர்த்தனர். மேலும் 42 ஆண்டுகளுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என்பதால் தமிழகத்தில் பல இடங்களில் எனது பெற்றோரை தேடி வருகிறேன்.

ஆனால் பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் எனது பெற்றோரை கண்டுபிடித்து விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, நிஷா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தெரிவித்துவிட்டு தொடர்ந்து கணவருடன் சேர்ந்து பெற்றோரை தேடி வருகிறார். இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 42 years a Danish girl wanders in search of her parents in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->