மீண்டும் ,மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..என்ன செய்கிறது காவல்துறை?
Again again the bomb threat What do the police do?
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கும், பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து 2 மணி நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது.
முதலமைச்சர் ரங்கசாமி வீடு மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர் கடைசியில் எதுவம் சிக்கவில்லை. அதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை விரைவில் கைது செய்துவிடுவோம் என காவல்துறையும்,அமைச்சர் நமசிவாயமும் தெரிவித்திருந்தார் .ஆனால் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கும், பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இ-மெயில் மூலம் தகவல் வந்ததை தொடர்ந்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary
Again again the bomb threat What do the police do?