வேளாண் பட்ஜெட் 2024: விலங்குகளுக்கு ஆபத்தில்லா மின்வேலிகள்... ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் வேளாண் சட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நல பாதுகாப்பு துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார் .

அதில், ரசாயன உர பயன்பாட்டை குறைக்க ரூ 6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிளகாய் பயிரிடுவதை ஊக்குவிக்கவும் 200 பண்ணை குட்டைகள் அமைதிடவும் ரூ. 3.67 கோடி நிதியோடு ஒதுக்கீடு செய்யப்படும். 

தென்காசி, நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும். உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா வகைகள் அறிமுகப்படுத்தப்படும். 

விவசாயிகள் நிறைந்த பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன், சுரைக்காய் பயிரிட ரூ. 9.40 கோடி ஒதுக்கப்படும். பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டு எடுத்து அதனை ஊக்குவிக்கவும் பரப்பு விரிவாக்கம் செய்யவும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும். 

தமிழ்நாட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ள பேரீச்சம் சாகுபடி 250 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய ரூ. 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். 

இயந்திர வாடகை திட்டத்தினை வலுப்படுத்த புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதலுக்காக ரூ. 28.82 கோடி ஒதுக்கப்படும். 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களை காக்கும் வகையில் சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture Budget 2024 issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->