பனை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்... தாக்கல் செய்யப்பட்ட அதிரடி பட்ஜெட்!
Agriculture Budget issue
வேளாண் மற்றும் உழவர் நல பாதுகாப்பு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் .
அதில், விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 16, 500 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினி மயமாக்க ரூ. 141 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காவிரி டெல்டா பகுதிகளில் 5338 கிலோமீட்டர் கொண்ட நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பனை சாகுபடி ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள் நடப்படும். மேலும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனை தொழிலாளர்களுக்கு தரமான பனை வெல்லம் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்படும்.
இதற்காக ரூ. 1 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் . 2024-25 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, நீர்வள ஆதார துறை, உணவு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கான மானிய கோரிக்கைகளின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.