சரியான திட்டமிடல் எதுவும் இல்லாமல் கட்டப்பட்ட சூளகிரி வேளாண் விரிவாக்க மையம்: குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
Agriculture Extension center Issue
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்பட்டு வரும் ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குளம் போல் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசுவதால், அலுவலர்கள், விவசாயிகள் அவதியுடன் வந்து செல்கின்றனர்.
சூளகிரி காவல் நிலையம் அருகே, சேமிப்பு கிடங்குடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, இக்கட்டிடங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த கட்டிடம், தாழ்வான இடத்தில் உரிய திட்டமிடுதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும், இந்த கட்டிடத்தின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கசிந்து வரும் கழிவுநீரும் அலுவலகத்தின் உள்ளே புகுந்ததில் குளம் போல் தேங்கி உள்ளது.
இதனால் அலுவலகத்தின் உள்ளே இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல், கேழ்வரகு மருந்துகள் போன்றவை கழிவுநீரால் பயனற்று போனதாக விவசாயிகள் கூறுகின்றனர்
English Summary
Agriculture Extension center Issue