#BigBreaking :: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. 

இதற்கிடையே நேற்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது தாமாக தலைவர் ஜி.கே வாசன் அதிமுக கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டுமென்ற கட்சி விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொள்கிறது.  தற்போதைய அரசியல் சூழல் எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவின் முடிவை ஏற்கிறோம். மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலனை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இதன் மூலம் அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் காண உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK contest in Erode East byelection


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->