அதிமுக கவுன்சிலர் செய்த சம்பவத்தால் குவியும் பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000, துணை மேயர்களுக்கு ரூ.15,000 மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ.10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 145வது வார்டு அதிமுக கவுன்சிலராக சத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தனது மதிப்பூதியத்தை மாநகராட்சி முதியோர் இல்லங்களுக்கு வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அதிமுக கவுன்சிலரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK councilor donating his salary to old age homes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->