#BREAKING || மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பேரூராட்சியின் 4வது அதிமுக கவுன்சிலராக சந்திரபாண்டியன் இருந்து வருகிறார். இவர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பாலமேடு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK councilor hacked to death in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->