டிஎன்பிஎஸ்சி தேர்வுகளையே கையாளத் தெரியாத திறனற்ற திமுக அரசு - போட்டு தாக்கும் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக திமுக அரசுக்கு கையாளத் தெரியவில்லை என்று, எதிர்க்கட்சி தலைவர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பிப். 25-ல் முற்பகல், பிற்பகல் என இருவேளைகளில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு வினாத்தாளில் பதிவெண் குளறுபடியால் தாமதமாக தொடங்கியது.

இதற்கிடையே, தேர்வர்கள் சிலர் புத்தகங்கள், செல்போன் பார்த்துவிட்டு வந்து தேர்வு எழுதியதாக சக தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், குளறுபடிகளுடன் நடந்த இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரின் டிவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் 25.02.23 - சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது, அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு வினாத்தாளில் முறைகேடு குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi k palanisamy Condemn TNPSC DMK Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->