#BigBreaking | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை வழக்கு! உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!
AIADMK EPS Election OPS Side Chennai HC
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அவசரமாக முறையிட்டுள்ளது. இதனை அவசர வழக்காக மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட உள்ளதாகவும், எனவே பொதுச் செயலாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடந்த முறை வழக்கு தொடரப்பட்டது.
அப்போது இடக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் முறையிடப்பட்டது .அப்போது நீதிபதி இந்த வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று மாலை அறிவிக்கப்பட்டு, இன்று காலை எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடாக முறையிடப்பட்டது.
அதில் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், பொறுப்புத் தலைமை நீதிபதி முன்னிலையில் மனோஜ் பாண்டியன் முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை நாளை விசாரிக்கலாம் என்றும், உரிய உத்தரவை நாளை பிறப்பிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை காலை 10 மணிக்கு மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
AIADMK EPS Election OPS Side Chennai HC