#Breaking : மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை! அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிக்காக புனரமைக்கப்பட்ட சிலை உடைப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மருகத்தூர் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுகவினரால் 6 அடி உயரம் கொண்ட எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. அதிமுகவின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி எம்ஜிஆர் சிலையானது சில தினங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் எம்ஜிஆர் சிலையின் இடது கை உடைக்கப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினருக்கு தெரிய வந்ததால் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் அவர்களே ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் . மேலும் எம்ஜிஆர் சிலை உடைத்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஏராளமான அதிமுக தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளிடம் திட்டக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தை கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK golden jubilee event MGR statue was broken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->