#தென்காசி || அதிமுக பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் பாட்டத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மனைவி தங்கம் கடையம் ஒன்றியத்தின் 9வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் பாப்பான்குளம் மலையான் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகன் பரமசிவன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கடையம் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தங்கம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது கடையத்தை அடுத்த ஏ.பி.நாடானூர் விலக்கு அருகே சென்ற அவரை பின்தொடர்ந்து வந்த பரமசிவன் தகராறு செய்ததோடு மறைத்து வைத்திருந்த கத்தியால், தங்கத்தை குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கத்திக்குத்து வாங்கிய தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆழ்வார்குறிச்சி போலீசார் தலைமறைவாக உள்ள பரமசிவனை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK woman councilor stabbed in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->