200-ஐ கடந்த காற்றின் தரம் - சென்னையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் சென்னையில் விடிய விடிய வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்றின் தரம் மேலும் மோசம் அடைந்து தரக்குறியீடு 200-ஐ கடந்துள்ளது.

நேற்று மாலை நான்கு மணி நேர நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 170-க்கு மேல் பதிவான நிலையில், தற்போது 200-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆக பதிவாகியுள்ளது.

இதேபோல், வேளச்சேரியில் 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 256, ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு அரசு சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கதண்டி நள்ளிரவு வரை பொதுமக்கள் பட்டாசு வெடித்துள்ளனர். 

காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, No2. s02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கடந்த 10ம் தேதி சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 83 ஆக கடந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air quality above 200 in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->